முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் வி.ஏ.ஓ. க்கள் ஒட்டுமொத்த விடுப்பு

பணியாளர் விரோதப் போக்கை கடைபிடிக்கும் கோட்டாட்சியரை கண்டித்து திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை கிராம அலுவலர்கள் வேலைநிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில்

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

பணியாளர் விரோதப் போக்கை கடைபிடிக்கும் கோட்டாட்சியரை கண்டித்து திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை கிராம அலுவலர்கள் வேலைநிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடையநல்லூர் வட்டம் பிரிக்கப்பட்டதை அடுத்து வருவாய்த்துறை பணியாளர்கள் நியமனம் செய்யும் ப்பட்டு வருகிறது. சங்கரன்கோவில் வட்டத்தில் இருந்து கிராம நிர்வாக அலுவலர் அருள்மாரியை திருநெல்வேலி கோட்டாட்சியர் தன்னிச்சையாக முடிவு எடுத்து கடையநல்லூர் வட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

கிராம நிர்வாக அலுவலர் பணியிட மாற்றத்தில் திருநெல்வேலி கோட்டாட்சியர் அடிப்படை விதிகளை பின்பற்றாமல் செயல்பட்டதாகவும், இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டக் கிளை சார்பில் மாவட்டம் முழுவுதம் பணி செய்யும் கிராம நிர்வாக அலுவலர்கள் 270 பேர் ஒட்டு மொத்த விடுப்பு எடுத்தனர்.

தொடர்ந்து திருநெல்வேலியில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்டச் செயலர் சொ. தங்கபெருமாள் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் டி. ராமனாதன் முன்னிலை வகித்தார். மாவட்டப் பொருளாளர் சி. குமார், துணைத் தலைவர் கே. முத்துசெல்வன், துணைச் செயலர்கள் கே. ராம்குமார், சி. அருணாசலம், எஸ். ராமச்சந்திரன், அமைப்புச் செயலர் ஜி. ஐயப்பன் உள்பட தென்காசி, அம்பாசமுத்திரம்,ஆலங்குளம், ராதாபுரம், நான்குனேரி உள்பட அனைத்து வட்டங்களை சேர்ந்த 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் பாதிப்பு: போராட்டத்தை தொடங்கி வைத்து பேசிய செயலர், இந்த போராட்டம் அரசுக்கு எதிரானது அல்ல. கிராம நிர்வாக அலுவலர் விரோதப் போக்கை கடைபிடித்து வரும் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை கண்டித்து நடத்தப் படுகிறது என்று தெரிவித்தார். இப்போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் சான்றுகள் பெற முடியாமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். உயர்கல்வி பயில செல்லும் மாணவர்கள் சான்றுகள் கிடைக்காமல் தவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →