இடதுசாரிகள் அணி சார்பில் ஜூலை 18-ல் மாற்று அரசியல் கொள்கை பிரகடனம்
இடதுசாரிகள் அணி சார்பில் வரும் ஜூலை 18-ம் தேதி மாற்றத்துக்கான மாற்று அரசியல் கொள்கை பிரகடனம் வெளியிடப்பட உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஆர்.விóஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இடதுசாரிகள் அணி சார்பில் வரும் ஜூலை 18-ம் தேதி மாற்றத்துக்கான மாற்று அரசியல் கொள்கை பிரகடனம் வெளியிடப்பட உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஆர்.விóஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இடதுசாரி கூட்டமைப்பு தலைவர்கள் பங்கேற்ற செய்தியாளர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அவர் அப்போது கூறியதாவது:
இடதுசாரிக் கட்சிகள் மக்கள் நலனை முன்வைத்து, தனித்தனியாகவும், கூட்டாகவும் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசில் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்ப்டடுள்ளனர்.
மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கை எதிர்கொள்வது குறித்து இடதுசாரிகள் கூட்டமைப்பு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஆர்எஸ்பி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மத்தியில் மோடி வந்தால் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் மக்களின் நிலைமை மேலும் மோசமடைந்து விட்டது. மாநிலத்திலும் ரங்கசாமி அரசு கீழ் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வாரியத் தலைவர்களை நியமித்தால் துறைகளை வளர்ச்சி பெறும் என நியமித்தனர். ஆனால் ஊழியர்களுக்கு
ஊதியம் தராதது தான் சாதனை. புதுச்சேரி மாநில அரசு நிர்வாகத் திறமை அற்றதாக உள்ளது. சமூக நீதி, சமூக பொருளாதாரம் தழைக்க தான் இடதுசாரிகள் கூட்டு சேர்ந்து போராடுகின்றன. ஆனால் ஆசிரியர்கள் நியமனத்தில் 50 சதவீதத்துக்கு மேல் பொதுப்பிரிவு ஒதுக்கீடு கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் புதுவை அரசோ 57 சதவீதம் ஒதுக்கீடு தருகிறது. இது சட்டத்துக்கு புறம்பாகும். தொழில் வளர்ச்சி இன்றி, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து விட்டது.
அரசின் செயலற்ற தன்மையால் சட்டம் ஒழுóங்கு சீர்குலைந்து விட்டது. மாற்று அரசியல் கொள்கை இடதுசாரிகள் கூட்டமைப்பு சார்பில் வரும் ஜூலை 18-ம் தேதிமாற்று அரசியல் கொள்கை தொடர்பான பிரகடனம் புதுவையில் வெளியிடப்படும். இதில் தேசிய தலைவர்களும் கலந்து கொள்வர். திறந்தவெளி கருத்தரங்குகளும் நடத்தப்படும்.தொடர் போராட்டங்கள் குறித்தும் அறிவிக்கப்படும்.
லோக்பால், லோக் ஆயுக்தா
புதுச்சேரியில் முறைகேடுகள் புரியும் அதிகாரிகள் மீது விசாரணை நடத்த லோக்பால்,லோக் ஆயுக்தாஅமைப்புகளை விரைவில் ஏற்படுத்த வேண்டும். புதுவையில் நியமிக்கப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தங்கள் சொத்து கணக்கு விவரங்களைவெளியிட வேண்டும்.
பல்வேறு அதிகாரிகள் மீது சிபிஐ விசாரணை நிலுவையில் உள்ளது. அதிகாரிகள் நேரடியாக களத்துக்கு சென்று அரசு திட்டங்கள் செயல்பாடு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றார் விóஸ்வநாதன். கூட்டமைப்பு நிர்வாகிகள் வி.பெருமாள், ஆர்.ராஜாங்கம், நாரா.கலைநாதன் சோ.பாலசுப்பிரமணியம், லெனின் உடனிருந்தனர்.