அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மழை: பாபநாசம் அணைக்கு 800 கனஅடி நீர்வரத்து
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்ததை அடுத்து அணைகளுக்கு நீர்வரத்து வரத் தொடங்கி உள்ளது. பாபநாசம் அணைக்கு வெள்ளிக்கிழமை விநாடிக்கு 800 கனஅடி நீர்வரத்து இருந்தது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்ததை அடுத்து அணைகளுக்கு நீர்வரத்து வரத் தொடங்கி உள்ளது. பாபநாசம் அணைக்கு வெள்ளிக்கிழமை விநாடிக்கு 800 கனஅடி நீர்வரத்து இருந்தது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியிலும், பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, தென்காசி, செங்கோட்டை உள்பட மாவட்டத்தில் பரவலாக கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.
வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 24 மி.மீ, பாபநாசம் கீழ் அணையில் 13 மி.மீ, சேர்வலாறு அணையில் 21 மி.மீ, மணிமுத்தாறு அணையில் 2.4 மி.மீ, கடனாநதி அணையில் 2 மி.மீ, ராமநதி அணையில் 15 மி.மீ,
கருப்பாநதி அணையில் 4 மி.மீ, குண்டாறு அணையில் 4 மி.மீ, அடவிநயினார் அணையில் 13 மி.மீ, கொடுமுடியாறு அணையில் 15 மி.மீ மழை, தென்காசியில் 22 மி.மீ மழையும், செங்கோட்டையில் 4.2 மி.மீ மழையும், ஆய்க்குடியில் 10.2 மி.மீ மழையும், ஆலங்குளத்தில் 12.4 மி.மீ மழையும், ராதாபுரத்தில் 5 மி.மீ மழையும், நான்குனேரியில் 1 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
தென்மேற்கு பருவ மழை தொடங்கியதை அடுத்து நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் நீர்வரத்து மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 800 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து பாசனத்திற்கு 904.75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதேபோல் சேர்வலாறு அணைக்கு விநாடிக்கு 300 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 48 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 95 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 25 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
அணைகளின் நீர்மட்டம்: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 70.30 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 79.72 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 81.95 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 49 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 40 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 43.79 அடி, குண்டாறு அணையின் நீர்மட்டம் 14.43 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 42 அடி, வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 27 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 12.70 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 4.50 அடியாகவும் இருந்தது.