முகப்பு
தற்போதைய செய்திகள்

நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடிப்பு: கடனாநதி, ராமநதி, அடவிநயினார்  அணைகளின் நீர்மட்டம் உயர்வு

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் நீடித்து வரும் மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் கடனாநதி, ராமநதி, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:48 AM
பகிர்:

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் நீடித்து வரும் மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் கடனாநதி, ராமநதி, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடித்து வருகிறது. சனிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணையில் 44, சேர்வலாறு அணையில் 17, மணிமுத்தாறு அணையில் 1, கடனாநதி அணையில் 3, ராமநதி அணையில் 14, கருப்பாநதி அணையில் 10, குண்டாறு அணையில் 11, அடவிநயினார் அணையில் 18, கொடுமுடியாறு அணையில் 30, தென்காசியில் 5, செங்கோட்டையில் 8.1, ஆய்க்குடியில் 5.2, ஆலங்குளத்தில் 1.4, ராதாபுரத்தில் 4, சிவகிரியில் 2.

நீர்வரத்து அதிகரிப்பு: நீர்பிடிப்புப் பகுதியில் நீடித்து வரும் மழையால் அணைகளின் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1211.88 கனஅடியும், சேர்வலாறு அணைக்கு விநாடிக்கு 530 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 13 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 148 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 42.50 கனஅடியும், அடவிநயினார் அணைக்கு 19 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

அதிகரிக்கிறது நீர்மட்டம்: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 70.60 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 80.31 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 81.86 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 2.10 அடி உயர்ந்து 51.10 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 2.50 அடி உயர்ந்து 42.50 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 44 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 1.50 அடி உயர்ந்து 6 அடி,

கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 43.58 அடி, குண்டாறு அணையின் நீர்மட்டம் 15.08 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 12.66 அடி, வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 27 அடியாகவும் இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →