முகப்பு
தற்போதைய செய்திகள்

விலையில்லா பொருட்கள் வழங்கக் கோரி கல்லிடைக்குறிச்சியில் பொதுமக்கள் திடீர் மறியல்

கல்லிடைக்குறிச்சியில் விலையில்லாப் பொருட்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வியாழக்கிழமை பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:50 AM
பகிர்:

கல்லிடைக்குறிச்சியில் விலையில்லாப் பொருட்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வியாழக்கிழமை பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கல்லிடைக்குறிச்சி பேரூராட்சியில் பயனாளிகளுக்கு விலையில்லாப் பொருட்கள் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியன வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி 7,161 பயனாளிகளுக்கு விலையில்லாப் பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே முகவரி மாற்றம், ரேசன் கடை மாற்றம் போன்ற காரணங்களால் 500 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு விலையில்லாப் பொருட்கள் பெறுவதற்கான டோக்கன் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் எஸ். பால்துரை, பேரூராட்சித் தலைவர் க. இசக்கிபாண்டியன் நடவடிக்கையால் விடுபட்ட பயனாளிகளுக்கு வியாழக்கிழமை டோக்கன் வழங்க முடிவு செய்யப்பட்டது.பேரூராட்சி திருமண மண்டபம், அகஸ்தியர் கோயில் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் டோக்கன் பெறுவதற்காக நீண்ட வரிசையில் பயனாளிகள் காத்திருந்தனர்.திடீரென டோக்கன் வழங்கப்படமாட்டாது என அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து பயனாளிகள் 100 க்கும் மேற்பட்டோர் பேருராட்சி அலுவலகம் முன்பு பிரதான சாலையில் அமர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் சபியுல்லா மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். சேரன்மகாதேவி சார் ஆட்சியர் வி. விஷ்ணு, விடுபட்ட பயனாளிகளுக்கு விலையில்லாப் பொருட்கள் வழங்க டோக்கன் வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. பயனாளிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. ஓரிரு நாளில் பொருட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →