மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயிலில் கருடசேவை
மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில் பிரமோற்சவ விழாவின் 3ஆம் நாள் நிகழ்ச்சியான கருடசேவை நிகழ்ச்சி சனிக்கிழமை காலை நடைபெற்றது.
மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில் பிரமோற்சவ விழாவின் 3ஆம் நாள் நிகழ்ச்சியான கருடசேவை நிகழ்ச்சி சனிக்கிழமை காலை நடைபெற்றது.
மதுராந்தகம் நகரின் முக்கிய வைணவ திருக்கோயிலாக திகழ்வது, அருள்மிகு ஏரிகாத்த ராமர் கோயில். இத்திருகோயிலில பிரமோற்சவ விழா கடந்த 25ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதன் முக்கிய நிகழ்ச்சியாக, கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு, அதிகாலையில் ககுணாகரபெருமான் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய், திருக்கோயில் வளாகத்தில் எழுந்தருளி, சிறப்பு திருமஞசன நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மலர் தோரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
Advertisement
சனிக்கிழமை காலை 6 மணிக்கு கருட வாகனத்தில் திருககோயிலில் இருந்து மேளதாள முழங்க, வெளியோ வந்தார். அப்போது அங்கு கூடிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீராமா ஸ்ரீராமா என முழக்கமிட்டனர். சிறிய திருவுருவ மேனியராய் பெரியாழ்வார் முன் செல்ல, கருட வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் கருணாகரபெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பின்னர் நகரின் முக்கியவீதிகளின் வழியாக பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர், நிகழ்ச்சி உபயதாரர்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.