தற்போதைய செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் 200 கிராம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 200 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சி.சண்முகவேல்

திருச்சி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 200 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு வந்த ஏர்-ஏசியா விமான பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்தனர். அப்போது ஒருவர் தான் அணிந்திருந்த உடையிலிருந்து சப்தம் ஒலித்தது. இதையடுத்து அதிகாரிகள் நபரை தனியாக அழைத்துச் சென்று சோதனையிட்டதில்  அவரது பேண்ட் பாக்கெட்டில் 200 கிராம் தங்க கட்டி இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.6 லட்சமாகும்.

தொடர்ந்து அவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் பகுதியைச் சேர்ந்த முகமது இர்பான் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த தங்கத்தை பறிமுதல் செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT