திருவள்ளூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவில், மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை தனியார் பள்ளி மாணவர்களே பிடித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை காலை பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் திருவள்ளூர் வருவாய் மாவட்டத்தில், திருவள்ளூர், பொன்னேரி கல்வி மாவட்டங்களில் 289 பள்ளிகளில் இருந்து, 41 ஆயிரத்து 365 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில், 36 ஆயிரத்து 121 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த தனியார் பள்ளிகள்: இம்மாவட்டத்தில் இயங்கி வரும் சூரப்பட்டு வேலம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவி எஸ்.யாமினி 1,188 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதல் இடம் பெற்றுள்ளார். இவர் தமிழில் 195, ஆங்கிலத்தில் 193, பொருளாதாரத்தில் 200, காமர்ஸில் 200, அக்கவுன்டண்சியில் 200 மற்றும் வணிக கணிதவியல் பிரிவில் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இம்மாவட்டத்தில் 2-வது இடத்தை 5 மாணவர்கள் பிடித்துள்ளனர். அம்பத்தூர் சேது பாஸ்கரா மேல்நிலைப் பள்ளி மாணவி, எஸ்.சுந்தரவள்ளி, முகப்பேர் வேலம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவிகள் எஸ்.நந்தினி, எஸ்.சிவபிரியா, பஞ்செட்டி வேலம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவி டி.பூஜிதா, திருமுல்லைவாயல் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி மாணவி கே.அனுசூயா ஆகியோர் 1,186 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்.
இம்மாவட்டத்தில் 3-ம் இடத்தை 3 மாணவர்கள் பிடித்துள்ளனர். பஞ்செட்டி வேலம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவி ஜி.அஷ்வினி, மாணவன் சி. மோகன்ராஜ் ஆகியோரும், ஆவடி நாசரேத் மெட்ரிக் பள்ளி மாணவி ஜெ.பிரியதர்ஷினி ஆகியோர் 1,185 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர்.
அரசுப் பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள்: அரசு பள்ளிகளில், செங்குன்றம் கே.பி.சி.அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவி எம்.ராதா 1,172 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், ஸ்ரீகாளிகாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர்.சூரியா 1,159 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், திருவாலங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் எஸ்.லோகேஷ் 1,137 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.