முகப்பு
தற்போதைய செய்திகள்

மாற்றுத் திறனாளிகள் இயக்கும் கியர் வண்டி: கலசலிங்கம் ஐடிஐ மாணவர்கள் வடிவமைப்பு

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், அருள்மிகு கலசலிங்கம் ஐ.டி.ஐ. மாணவர் மாற்றுத் திறனாளிகள் இயக்கும் கியர் வண்டியை வடிவமைத்துள்ளனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:14 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், அருள்மிகு கலசலிங்கம் ஐ.டி.ஐ. மாணவர் மாற்றுத் திறனாளிகள் இயக்கும் கியர் வண்டியை வடிவமைத்துள்ளனர்.

இங்கு வயர்மேன் பிரிவில் 2-ம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர் கே.அஸ்வின், பயிற்றுநர்கள் மணிமாறன், செந்தில்கருப்பன் ஆகியோர் ஆலோசனையின் பேரில் மாற்றுத் திறனாளிகள் இயக்கும் கியர் வண்டியை வடிவமைத்து, இக் கருவியை இரு சக்கர அல்லது மூன்று சக்கர வாகனம் பொருத்தி சாதனை படைத்துள்ளார்கள்.

வேலை செய்யும் விதம்:

தானியங்கி எலக்ட்ரிக் கியர் பாக்ஸ் ஆனது வண்டியை ஆன் செய்தவுடன் பேட்டரியிலிருந்து டிசி சப்ளை வந்து, முதல் புஸ்பட்டனை அடைகிறது. இந்த பட்டனை சுவிட்சை கையால் அழுத்துவதன் மூலமாக டிசி மின் சப்ளை சோல்னாய்டு சுவிட்சை அடைகிறது. இந்த சோல்னாய்டு சுவிட்ச் எல்க்ரிக்கல் பவரை மெக்கானிக்கல் பவராக மாற்றி கியர்களை கூட்டவும் குறைக்கவும் செய்கிறது. இந்த வடிவமைப்பு மாற்றுத் திறனாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. இதனை ரிமோட் மூலமாகவும் கன்ட்ரோல் செய்யவும் முடியும்.

இதனை கால்கள் இல்லாத மாற்றுத் திறனாளிகள் கையாலேயே கியரை மாற்றி இரு சக்கர வாகனத்தை ஓட்ட இயலும் என்றார் மாணவர் கே.அஸ்வின்.

இந்த புதிய இயந்திரத்தை வடிவமைத்த மாணவரை, ஐடிஐ செயலாளர் மற்றும் பல்கலைக்கழக வேந்தர் க.ஸ்ரீதரன், முதல்வர் தங்கவேலு, துணைப் பதிவாளர் பி.ஜி.குருசாமிபாண்டின் ஆகியோர் திங்கள்கிழமை பாராட்டினர்.

முழு கட்டுரையைப் படிக்க →