முகப்பு
தற்போதைய செய்திகள்

பாஜக நிர்வாகி கொலையில் தொடர்புடைய 2 பேர் மன்னார்குடி நீதிமன்றத்தில் சரண்

திருவாரூர் மாவட்டம்,முத்துப்பேட்டை அருகே பெட்ரோல் பங்கு உரிமையாளரும்,பாஜக கிளைத் தலைவருமான ப.வெங்கடேசன் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 2 பேர்

Updated On : 14 மே, 2015 at 4:27 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 11:01 AM

திருவாரூர் மாவட்டம்,முத்துப்பேட்டை அருகே பெட்ரோல் பங்கு உரிமையாளரும்,பாஜக கிளைத் தலைவருமான ப.வெங்கடேசன் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 2 பேர் வியாழக்கிழமை மன்னார்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

உதயமார்த்தாணடபுரத்தை சேர்ந்த பக்கிரிசாமி மகன் வெங்கடேசன்(27).இவர் அப்பகுதியில் பெட்ரோல் பங்கு வைத்திருப்பதுடன் பாஜகவில் கட்சின் கிளை செயலாராகவும் இருந்து வந்துள்ளார்.திங்கள்கிழமை இரவு வெங்கடேசன் தனது பெட்ரோல்பங்கில் இருந்த போது அங்கு இருசக்கர வானங்களில் வந்தவர்கள் அரிவாளால் சராமரியாக வெங்கடேசனை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனராம்.

இது குறித்து முத்துப்பேட்டை காவல்நிலைய போலீஸார் வழக்கு பதிந்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில்.வெங்கடேசன் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸார் தங்களை தேடி வருவதாக கூறி திருத்துறைப்பூண்டி அடுத்துள்ள தோலியை சேர்ந்த அ.மருதுபாண்டியன்(24),முத்துப்பேட்டை அருகேயுள்ள சித்தமல்லியை சேர்ந்த விஜி என்ற விஜேந்திரன்(25) ஆகிய இருவரும் வியாழக்கிழமை மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் நீதிபதி பன்னீர்செல்வம் முன்னிலையில் சரணடைந்தனர்.இருவரையும் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி கூறியதை அடுத்து மன்னார்குடி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.