ஐ.நா. குழந்தைகள் உரிமைகள் மீதான உடன்படிக்கை நிறைவேற்றிட கோரிக்கை
ஐ.நா. குழந்தைகள் உரிமைகள் மீதான உடன்படிக்கை நிறைவேற்றிட குழந்தை உழைப்பு எதிர்ப்பு பிரச்சாரம் கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போதைய செய்திகள்ஐ.நா. குழந்தைகள் உரிமைகள் மீதான உடன்படிக்கை நிறைவேற்றிட கோரிக்கை
ஐ.நா. குழந்தைகள் உரிமைகள் மீதான உடன்படிக்கை நிறைவேற்றிட குழந்தை உழைப்பு எதிர்ப்பு பிரச்சாரம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஐ.நா. குழந்தைகள் உரிமைகள் மீதான உடன்படிக்கை நிறைவேற்றிட குழந்தை உழைப்பு எதிர்ப்பு பிரச்சாரம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி குழந்தை உழைப்பு எதிர்ப்பு பிரச்சாரம் (CACLCACL) மாநில அமைப்பாளர் பா. ராஜகோபால் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
குழந்தை தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவந்து நடுவண் அரசின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது மேலும் இந்த சட்ட திருத்தங்கள் மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
ஏற்கெனவே, இன்றைய தொலைக்காட்சிகளில் குழந்தைகள் பல்வேறு நிகழ்ச்சிகளில், போட்டிகளில் இரவும், பகலும் பலமணி நேரம் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவ்வாறு ஈடுபடுத்தப்படும் போது குழந்தைகள் தங்களது குழந்தை பருவத்தை இழந்து உடலளவிலும், மனதளவிலும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
குழந்தைகள் பள்ளி போகும் முன்பும், பின்பும், வீட்டில் பணிபுரிய ஈடுபடுத்தப்படுதினால் அவர்களது வளர்ச்சி தடைபடும், படிப்பின் மீதான அரவமும் குறையும், என்பதோடு அவர்களுடைய எண்ணமும் திசை திரும்ப வாய்ப்பு உள்ளது.
தற்போது தமிழகத்தில் பரவலாக அனைத்து மாவட்டத்திலும் குழந்தை தொழிலாளர் முறை என்பது காணப்படுவது அனைவரும் அறிந்ததே குறிப்பாக சொல்லப்போனால் திருநெல்வேலி மாவட்டத்தில் பீடி தொழிலிலும், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தீப்பெட்டி, பட்டாசு தயாரிப்புத் தொழிலிலும், மதுரை மாவட்ட குழந்தைகள் பல்வேறு மாநிலங்களுக்கு மிட்டாய் கம்பெனிகளுக்கும், திருவண்ணமாலை மாவட்ட குழந்தைகள் செங்கல் தயாரிப்பு பணிகளிகளுக்கும், திருப்பூர், திண்டுக்கல், கோயம்பத்தூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பஞ்சாலைகளிலும், சேலம் மாவட்ட குழந்தைகள் கொலுசுப் பட்டறை தொழிலுக்கும் மேலும் பல்வேறு குடிசை தொழிலிலும் குழந்தைகள் பணியமர்த்தப்படுகின்றனர்.
இந்த திருத்த மசோதா குலக்கல்வித் திட்டத்தை மீண்டும் இந்தியாவில் கொண்டுவர முனைவதாகவும், குழந்தைத் தொழிலாளர் முறைக்கு சட்டபூர்வ அனுமதியளிப்பது போன்றும் தோற்றம் அமைந்துள்ளது.
எனவே தற்போதைய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள சட்டத் திருத்த மசோதா, குழந்தைகளை தொழிலாளர்களாக ஆக்குவதோடு அவர்களின் அடிப்படை கல்வி உரிமை பறிக்கப்பட்டு, இதனால் குழந்தைகளின் வளர்ச்சியும், கல்வியும் பதிக்கப்படும் நிலை எற்படும்.
ஆகவே இந்த சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறாமல் தடுப்பதும் சரியான திருத்த மசோதாவை நிறைவேற வைப்பதும் அனைவரது கடமை. குழந்தை உழைப்பு எதிர்ப்பு பிரச்சாரத்தின் (CACLCACL) சார்பாக அளிக்கப்படுகிறது.
இந்திய அரசமைப்பு சாசனம் குழந்தைத் தொழிலாளர் முறையை சட்ட விரோதமானதாக அறிவித்துள்ளது. மேலும் ஐ.நா. குழந்தைகள் உரிமைகள் மீதான உடன்படிக்கை (UNCRCUNCRC) யின் படி குழந்தைகள் பொருளாதார ரீதியாக சுரண்டபடுவதற்கு தடைவிதிகின்றது. எனவே ஐ.நா. குழந்தைகள் உரிமைகள் மீதான உடன்படிக்கை (UNCRCUNCRC) யையும் இந்திய அரசமைப்பு சாசனத்தையும், இந்த 1986ம் ஆண்டின் குழந்தை தொழிலாளர் (தடுப்பு மற்றும் முறைபடுத்துதல்) சட்டமும், தற்போதைய 2012ம் ஆண்டின் குழந்தை தொழிலாளர் (தடுப்பு மற்றும் முறைபடுத்துதல்) மசோதாவும் சாசனத்தை மீறுவதாக உள்ளது, எனவே இந்தியா அரசமைப்பு சாசனத்தையும், ஐ.நா. குழந்தைகள் உரிமைகள் மீதான உடன்படிக்கை சரத்துகளையும் பின்பற்றிட கேட்டுகொள்கின்றது.
அனைத்து குழந்தைகளும் 18 வயது வரையில் அனைத்து விதமான வேலைகளிலும் ஈடுபடுவதை தடை செய்வதற்கு ஏற்ற வகையிலும், இந்த சட்டங்கள் அனைத்து குழந்தைகளின் நலனுக்கான சிறப்பான முறையில் பயன்படுவதை உறுதிபடுத்த வேண்டும்.
அனைத்து விதமான குழந்தைகளுக்கான சட்டங்களிலும் குழந்தையின் வயது 18 வயது என்று நிர்ணயம் செய்திடவேண்டும்.18 வயது வரையில் இலவச கட்டாய, சமமான, தரமான கல்வி பெரும் உரிமை அரசமைப்பும் சாசனத்தில் அடிப்படை உரிமையாக இருப்பது தொடர்பாக ஒரு நிலை குறிப்பை வரையறுக்கும் அத்தியாயம் கொண்டுவரவேண்டும் என்று மாநில அமைபாபாளர் பா.ராஜகோபால் கேட்டுக் கொண்டுள்ளார்.