முகப்பு
தற்போதைய செய்திகள்

வடபத்ரசயனர் கோவில் கும்பாபிஷேகம்: யாகசாலை பூஜைகளுடன் தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு வடபத்ரசயனர் (வடபெருங்கோவிலுடையான்) திருக்கோவில் ஜீர்ணோத்தாரண மஹாசம்ப்ரோக்ஷணம் வெள்ளிக்கிழமை நடைபெறுவதையொட்டி, யாகசாலை

தற்போதைய செய்திகள்

வடபத்ரசயனர் கோவில் கும்பாபிஷேகம்: யாகசாலை பூஜைகளுடன் தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு வடபத்ரசயனர் (வடபெருங்கோவிலுடையான்) திருக்கோவில் ஜீர்ணோத்தாரண மஹாசம்ப்ரோக்ஷணம் வெள்ளிக்கிழமை நடைபெறுவதையொட்டி, யாகசாலை

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு வடபத்ரசயனர் (வடபெருங்கோவிலுடையான்) திருக்கோவில் ஜீர்ணோத்தாரண மஹாசம்ப்ரோக்ஷணம் வெள்ளிக்கிழமை நடைபெறுவதையொட்டி, யாகசாலை பூஜைகள் திங்கள்கிழமை தொடங்கியது.

ஸ்ரீபெரியாழ்வாரும், அவர் தம் திருமகளாய் ஸ்ரீஆண்டாளும் அவதரித்து மங்களாசாஸனம் செய்யப்பட்ட, ஸ்ரீவடபத்ரசாயி என்றும் வடபெருங்கோவிலுடையான் என்றும் திவ்ய திருநாமங்களுடன் உகந்து எழுந்தருளியுள்ள திவ்யதேசம் ஸ்ரீவில்லிபுத்தூர் க்ஷேத்திரம்.பெரிய திருவடியின் அம்சமாய் அவதரித்த ஸ்ரீபெரியாழ்வார் வடபெருங்கோவிலுடையானுக்கு அழகிய நந்தவனம் அமைத்து மாலைக் கைங்கர்யம் செய்து வந்தார். பாண்டிய மன்னனின் சபையிலே பரத்துவ நிர்ணயம் செய்து அதனால்  கிடைத்த பெரும் தனத்தைக் (பொற்கிளி) கொண்டு இந்த எம்பெருமானுக்கு உயர்ந்த ராஜகோபுரத்தையும் அமைத்தார்.

எம்பெருமான் ஸ்ரீவடபத்ரசயனருக்கும், ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர், ஸ்ரீலக்ஷ்மி வராஹர், ஸ்ரீசக்கரத்தாழ்வார், ஸ்ரீபெரியாழ்வார், தமிழக அரசின் முத்திரைச் சின்னமான ராஜகோபுரம், விமானங்கள் மற்றும் அனைத்து மூர்த்திகளுக்கும் 22-ம் தேதி வெள்ளிக்கிழமை மஹா சம்ப்ரோக்ஷணம் நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில் ஸ்ரீமத் பரமஹம்ஸ வானமாமலை ஸ்ரீஸ்ரீஸ்ரீமதுரகவி ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள், ஸ்ரீஸ்ரீஸ்ரீ த்ரிதண்டி ஸ்ரீமன்நாராயண சின்ன ஜீயர் ஸ்வாமிகள் எழுந்தருளி மங்களாசாஸம் செய்கிறார்கள்.

இதற்கான யாகசாலை பூஜைகள் திங்கள்கிழமை  தொடங்கியது. பூஜைகளை ஸ்ரீநாச்சியார் சாரிட்டி டிரஸ்ட் தலைவர் மற்றும் ராம்கோ தொழில் குழுமத் தலைவர் பி.ஆர்.ராமசுப்பிரமணியராஜா, தக்கார் கி.ரவிச்சந்திரன், பட்டர் டாக்டர் வெ.வாசுதேவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.யாகசாலை பூஜை கோவில் பட்டர் டாக்டர் வெ.வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →