முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காட்டாற்று வெள்ளம்: 2 பேர் சாவு: பலரை காணவில்லை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், பலரைக் காணவில்லை என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காட்டாற்று வெள்ளம்: 2 பேர் சாவு: பலரை காணவில்லை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், பலரைக் காணவில்லை என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், பலரைக் காணவில்லை என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

வத்திராயிருப்பு தாணிப்பாறை-சதுரகிரி மலைக்கு அமாவாசைக்கு ஏராளமான பக்தர்கள் சென்று அங்குள்ள சுந்தரமகாலிங்கத்தை தரிசனம் செய்து வருவார்கள். கோடைவிடுமுறை, ஞாயிறு விடுமுறை எல்லாம் சேர்ந்ததால், வழக்கத்திற்கு மாறாக ஞாயிற்றுக்கிழமை சுமார் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து இங்கு சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர்.
பகல் சுமார் 12 மணியளவில் இப் பகுதியில் கன மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக திடீரென காட்டாற்று வெள்ளம் அப் பகுதியை சூழ்ந்தது.

இதில் பலர் அங்குள்ள பாறைகளின் மேல் ஏறி நின்றனர். சிலர் மரங்களில் ஏறிக் கொண்டனர். இந்தச் சூழ்நிலையில் அங்கு குளித்துக் கொண்டிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த பி.இ. பட்டதாரி சரவணன், பட்டுக்கோட்டையில் மொபைல்போன் கடை வைத்துள்ள உதயா உள்ளிட்ட சிலரை அவர்கள் உறவினர்கள் கண் எதிரே காட்டாற்று வெள்ளம் இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

மேலும் வத்திராயிருப்பு கீழத்தெருவைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் பொன்ராஜ் (18), ஆனந்தராஜ் மகன் பாஸ்கரன் (18) உள்ளிட்ட 8 பேர் குளிக்கச் சென்றுள்ளார்கள். இதில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி பொன்ராஜ் உயிரிழந்தார். இவரது சடலம் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் பாஸ்கரன் மற்றும் குன்னூர்-புதூரைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரையும் காட்டாற்று வெள்ளம் இழுத்துச் சென்று விட்டதாயும் போலீஸார் கூறினர்.
இது குறித்த தகவல் காவல் துறைக்கு கிடைத்தும், பக்தர்கள் மலைக்கு ஏறும் பாதைகளை அடைத்துவிட்டனர். இதனால் பெரும் உயிர் சேதம் தடுக்கப்பட்டது.

சம்பவம் பற்றி அறிந்ததும் தமிழக செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியன், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திரபாடாரி, சிவகாசி சார் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் போலீஸார் விரைந்து சென்று வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் நேரடியாக ஈடுபட்டனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்: அதிகாரப்பூர்வமாக பொன்ராஜ் என்பவரும், 60 வயது மதிக்கத் தக்க முதியவர் ஒருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

வத்திராயிருப்பைச்சேர்ந்த ஆனந்தராஜ் மகன் பாஸ்கரன், குன்னூர்-புதுரைச் சேர்ந்த ஒரு ஆசிரியர், ராமநாதபுரத்தைச் சேர்ந்த பி.இ. பட்டதாரி சரவணன், பட்டுக்கோட்டையில் மொபைல்போன் கடை வைத்துள்ள உதயா ஆகிய நால்வரைக் காணவில்லை என்று தெரியவந்துள்ளது. மேலும் பலரது செல்போன்கள் சுவிட் ஆப் என்றும், பலரது செல்போன்கள் தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாயும் கூறப்படுகிறது.

தனியே கோவிலுக்கு வந்தவர்கள் மற்றும் சிலர் குறித்த தகவல்கள் தெரியாமல் உறவினர்கள் உள்ளார்கள். திங்கள்கிழமை காலையே முழு நிலவரமும் தெரியவரும். இதுபோன்ற திடீர் காட்டாற்று வெள்ளம் 20 ஆண்டுகளுக்கு முன்னர் வந்ததாகவும் தெரிவித்தனர். இரவு சம்பவ இடத்தை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்பிரமணியன் வந்து பார்வையிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →