ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காட்டாற்று வெள்ளம்: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு: மேலும் சிலரைக் காணவில்லை
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக உடனடியாக தகவல் கிடைத்தது.
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காட்டாற்று வெள்ளம்: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு: மேலும் சிலரைக் காணவில்லை
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக உடனடியாக தகவல் கிடைத்தது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக உடனடியாக தகவல் கிடைத்தது. திங்கள்கிழமை மேலும் நால்வரது சடலங்கள் மீட்டகப்பட்டதைத் தொடர்ந்து சாவு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. தமிழக அமைச்சர்கள் மூவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் இருவரின் நேரடி மேற்பார்வையில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வத்திராயிருப்பு தாணிப்பாறை-சதுரகிரி மலைக்கு அமாவாசைக்கு ஏராளமான பக்தர்கள் சென்று அங்குள்ள சுந்தரமகாலிங்கத்தை தரிசனம் செய்து வருவார்கள். கோடைவிடுமுறை, ஞாயிறு விடுமுறை எல்லாம் சேர்ந்ததால், வழக்கத்திற்கு மாறாக ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து இங்கு சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர்.
பகல் சுமார் 12 மணியளவில் இப் பகுதியில் கன மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக திடீரென காட்டாற்று வெள்ளம் அப் பகுதியை சூழ்ந்தது.இதில் வத்திராயிருப்பைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் ரா.பொன்ராஜ் (18), புளியங்குடியில் தனியார் ஐடிஐ யில் படித்து வரும் வத்திராயிருப்பு ஆனந்தராஜ் மகன் பாஸ்கரன் (20), தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அசோகரன் மகன் உதய கணேஷ் (24), தூத்துக்குடியைச் சேர்ந்த அனந்தப்பன் (45) ஆகிய அடையாளம் தெரிந்த நால்வர் உயிரிழந்தனர்.
மேலும் அடையாளம் காணப்படாமல் சுமார் 40-50 வயது மதிக்கத்தக்க இரு ஆண்கள் உடல்களும் மீட்டகப்பட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.தற்போது தூத்துக்குடியைச் சேர்ந்த குருசாமி (53), இவரது மகள் முப்பிடாரி (13), தூத்துக்குடியைச் சேர்ந்த பட்டாளம் (எ) ஆனந்தம் (53), ராமநாதபுரத்தைச் சேர்ந்த சரவணக்குமார் (27) ஆகிய நால்வரைக் காணவில்லை என்று அவர்களது உறவினர்கள் தாணிப்பாறையில் உள்ளார்கள்.
தமிழக அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்பிரமணியன், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதரி, சிவகாசி சார் ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஆகியோர் சம்பவ இடத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதலே முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.
திங்கள்கிழமை பிற்பகலில் மீண்டும் இப் பகுதியில் மீண்டு மழை பெய்யத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து வரும் 20-ம் தேதி வரை இந்த வனப் பகுதிக்குள் பொதுமக்கள் நுழைய வனத்துறை தடை விதித்துள்ளது.