முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லையில் முதியவர் திடீர் உண்ணாவிரதம்

திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை மாநகராட்சி அலுவலகம் முன்பு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி முதியவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை மாநகராட்சி அலுவலகம் முன்பு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி முதியவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முக்கூடல் அருகே மயிலப்பபுரத்தை சேர்ந்த எஸ். மாங்கனி என்ற அப்துல்கனி (85). இவர் மாநகராட்சி அலுவலகம் முன்பு அண்ணா சிலை முன்பு அமர்ந்து திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது: எனது 5 மகள்களுக்கும் சீர்வரிசை அளித்து திருமணம் செய்து வைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தேன். இருந்தபோதிலும், குடிபழக்கம் கொண்ட எனது மருமகன்கள் என்னிடம் இருந்த பல லட்சம் பணத்தை ஏமாற்றி பறித்து கொண்டனர்.

மதுபழக்கத்தால் எனது மகள்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே மக்களை பாதிக்கும் மது விற்பனை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என குறிப்பிட்டார். அவரிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தை அவர் கைவிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →