திருவண்ணாமலையில் மாட்டுக்கறி விருந்து: தமிழ்நாடு முற்போக்கு சங்கம், கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் மீது தாக்குதல்
திருவண்ணாமலையில் தமிழ்நாடு முற்போக்கு சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாட்டுக்கறி விருந்தில் கலந்து கொள்ள கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு சங்க நிர்வாகிகள் ஊர்வலமாக சென்றனர்.

அப்போது போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனிடையே இவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் காயம் அடைந்த பலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தை செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களையும் புகைப்படக்காரர்களையும் போலீஸார் தாக்கியுள்ளனர். இதனால் அங்கு அரைமணி நேரத்துக்கு மேலாக பரபரப்பு நிலவியது.