தற்போதைய செய்திகள்

பள்ளிபாளையம் காவிரி ரயில் பாலத்தில் வெடிகுண்டு போன்ற மர்ம பொருள் போலீஸார் விசாரணை

பள்ளிபாளையம் காவிரி ஆறு ரயில் பாலத்தில் வெடிகுண்டு போன்ற தோற்றம் உடைய இரண்டு பொருட்கள் ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கபட்டது. 

பெ. விஜயபாஸ்கர்

பள்ளிபாளையம் காவிரி ஆறு ரயில் பாலத்தில் வெடிகுண்டு போன்ற தோற்றம் உடைய இரண்டு பொருட்கள் ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கபட்டது. 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆறு ரயில் பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ரயில்வே ஊழியர் ரவிபிரசாத் என்பவர் ரயில் பாதையை ஆய்வு செய்தார்.  அப்போது ரயில் பாலத்தின் மையத்தில் விளக்கு போன்ற திரியுடன் கருப்பு நிறத்துடன் இரண்டு வெடிபொருள் தோற்றத்துடன் இருந்ததை பார்த்தார்.

இதுகுறித்து அவர் ஈரோடு ரயில் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பிறகு ரயில்வே போலீஸார், பள்ளிபாளையம் போலீஸார், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணி்ப்பாளர் எஸ்.ஆர்.செந்தில்குமார், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

வெடி குண்டு நிபுணர்களை வரவழைத்து ரயில் பாலத்தின் மையத்தில் இருந்த வெடி போன்ற தோற்றம் உடைய பொருட்களை மீட்டு ஆய்வு செய்தனர். பின்னர் தனி அறையில் வைத்து பிரித்து பார்க்கும் போது அதில் உள்ளே மணல் இருந்ததை கண்டு பிடித்தனர்.

என்ன காரணத்திற்காக, வெடிகுண்டு போன்ற பொருட்கள் பாலத்தில் வைத்தார்கள், யார் வைத்தார்கள் என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT