முகப்பு
தற்போதைய செய்திகள்

பட்டாசு வசூல்: பெண் எஸ்.எஸ்.ஐ. உள்ளிட்ட இரு காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கோட்டத்தில் கடைகளில்

தற்போதைய செய்திகள்

பட்டாசு வசூல்: பெண் எஸ்.எஸ்.ஐ. உள்ளிட்ட இரு காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கோட்டத்தில் கடைகளில்

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:30 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கோட்டத்தில் கடைகளில் இலவசமாக பட்டாசு வசூல் செய்த பெண் சிறப்பு காவல் சார்பு ஆய்வாளர் மற்றும் முதுநிலை கிரேடு 1 காவலர் ஆகிய இருவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் ஆயுதப்படைக்கு மாற்றி திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் பெண் சிறப்பு காவல் சார்பு ஆய்வாளராக பணி செய்து வந்தவர் காசியம்மாள். இதே காவல் நிலையத்தில் முதுநிலை கிரேடு 1 காவலராக வேலை செய்து வந்தவர் கணேசன். இருவரும் பல கடைகளில் இலவசமாக பட்டாசுகள் கேட்டு பெற்று வந்துள்ளனர். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனுக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக இருவரையும் விருதுநகர் ஆயுதப்படைக்கு மாற்றி அவர் உத்தரவிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →