முகப்பு
தற்போதைய செய்திகள்

ராக்கிங் காரணமாக பொறியியல் மாணவன் தூக்கிட்டு தற்கொலை

ஹைதராபாத்தில் பொறியியல் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 20 நவம்பர், 2015 at 11:51 AM
பகிர்:

ஹைதராபாத்தில் பொறியியல் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ண சைதன்யா (19). இவர் சென்னையில் உள்ள சத்தியபாமா பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் கல்லூரியில் பயிலும் மூத்த மாணவர்கள் சிலர், கடந்த சில நாட்களாக ராக்கிங் செய்து வந்துள்ளனர். ராக்கிங் ஒரு கட்டத்தை மீறியுள்ளதால், சைதன்யா மணமுடைந்துள்ளார்.

இதையடுத்து, தீபாவளி விடுமுறைக்காக தனது சொந்த ஊரான ஹைதராபாத்துக்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து,  போலீசார் பிரேதத்தை கைபற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.