தற்போதைய செய்திகள்

வேதாரண்யம் அருகே மின்சாரம் பாய்ந்து சமையல்காரர் சாவு

நாகை மாவட்டம்,வேதாரண்யம் அருகே புதுமனை புகுவிழாவில் மின்சாரம் பாய்ந்து சமையல்காரர் ஒருவர் இன்று காலை பலியான நிலையில்,

கே.பி. அம்​பி​கா​பதி

நாகை மாவட்டம்,வேதாரண்யம் அருகே புதுமனை புகுவிழாவில் மின்சாரம் பாய்ந்து சமையல்காரர் ஒருவர் இன்று காலை பலியான நிலையில்,

மேலும் ஒரு சமையல்காரர் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வேதாரண்யத்தை அடுத்த தாணிக்கோட்டகம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபத்திரன்(60).இதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (55).இருவரும் சமையல் செய்யும் தொழிலாளர்கள். தென்னடார் கிராமத்தைச் சேர்ந்த சிங்காரவேலு என்பவர் கட்டிய புதிய வீட்டில் இன்று காலை புதுமனை புகுவிழா நடைபெற்றது.

இங்கு இருவரும் சமையல்செய்தனர்.தகர சீட்டால் போடப்பட்டிருந்த பந்தலில் மின்சார கசிவு ஏற்பட்டு,இவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. உடனடியாக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இவர்களில் வீரபத்திரன் உயிரிழந்த நிலையில்,குணசேகரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT