மது போதையில் அரசு பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநரை பிடித்து போலீஸில் ஒப்படைத்த பயணிகள்
அரசு பேருந்தை மது அருந்திவிட்டு தாறுமாறாக ஓட்டி வந்த ஓட்டுநரை பயணிகள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
தற்போதைய செய்திகள்மது போதையில் அரசு பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநரை பிடித்து போலீஸில் ஒப்படைத்த பயணிகள்
அரசு பேருந்தை மது அருந்திவிட்டு தாறுமாறாக ஓட்டி வந்த ஓட்டுநரை பயணிகள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
அரசு பேருந்தை மது அருந்திவிட்டு தாறுமாறாக ஓட்டி வந்த ஓட்டுநரை பயணிகள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். பின்னர் மாற்று ஒட்டுநர் பேருந்தை ஓட்டிச் சென்றார்.
அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (31). இவர் அரசு போக்குவரத்துக் கழக ராஜபாளையம் பணிமனையில் ஓட்டுநராக உள்ளார். மதுரையிலிருந்து செங்கோட்டை செல்லும் பேருந்தை இன்று மாலை திருமங்கலத்தில் பயணிகளுடன் எடுத்து வந்துள்ளார். பேருந்து அதி வேகமாகவும் தாறுமாறாகவும் வந்துள்ளது. பதறிய பயணிகள் ஓட்டுநர் ராமகிருஷ்ணனிடம் கூறியுள்ளார்கள். ஆனால் அவர் அமர்ந்து பேருந்தை ஓட்டக் கூட இயலாத நிலையில் இருந்துள்ளார். இதனையடுதது ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திற்குள் பேருந்து வந்ததும், பயணிகள் டிரைவர் ராமகிருஷ்ணனைப் பிடித்து புற காவல் நிலையத்தில் போலீஸாரிடம் ஓப்படைத்தனர்.
தனது மனைவி விபத்தில் சுயநினைவை இழந்து இருப்பதால், பிள்ளைகளை பராமரிக்க இயலாத நிலையில் இருந்த மனவேதனையில் மது அருந்தியதாக போக்குவரத்துக் கழக அலுவலர்கள் மற்றும் போலீஸாரிடம் ராமகிருஷ்ணன் கூறினார். பின்னர் மாற்று ஓட்டுநரை போட்டு பேருந்தை செங்கோட்டைக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.