முகப்பு
தற்போதைய செய்திகள்

கல்வி உதவித் தொகை: தொழிலாளர்களின் குழந்தைகளிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்பு  

கல்வி உதவித் தொகை பெற தொழிலாளர்களின் குழந்தைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பகப்படுவதாக தொழிலாளர் துறை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

Updated On : 6 செப்டம்பர், 2015 at 9:39 AM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:08 PM

கல்வி உதவித் தொகை பெற தொழிலாளர்களின் குழந்தைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பகப்படுவதாக தொழிலாளர் துறை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விருதுநகர் தொழிலாளர் ஆய்வாளர் மைவிழிசெல்வி சனிக்கிழமை  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கீழ்க்குறிப்பிட்டுள்ளவாறு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதில், புத்தகங்கள் வாங்குவதற்கு 11-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டம் வரை பயிலும் தொழிலாளர்களுக்கு நூல்களுக்கான நிதியுதவி அளிக்கப்படுகிறது. அதேபோல், பொறியியல், மருத்துவம், சட்டம், விவசாயம், பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் ஆகிய கல்விகளின் பட்ட மேற்படிப்பு, பட்டபடிப்பு மற்றும் பட்டய படிப்பு படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகையும் வழங்கப்படுகிறது. 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறும் முதல் 10 மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே இக்கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பங்களை செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், த.பெ.எண்-718, தேனாம்பேட்டை, சென்னை என்ற முகவரியில் சுயவிலாசமிட்ட அஞ்சல் தலை ஓட்டப்பட்ட உறையுடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். இந்த கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை அக்.31-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் அலுவலகத்தை அணுகி விவரங்களை அறிந்து கொள்ளலாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.