முகப்பு
தற்போதைய செய்திகள்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க  மாவட்ட பேரவை கூட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 14 செப்டம்பர், 2015 at 4:17 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:12 PM

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர் சங்க வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ச.முருகேசன் தலைமை வகித்தார். இப்பேரவையில் இதுவரையில் நடந்த வேலை அறிக்கையினை மாவட்ட செயலாளர் நா.புகழேந்தியும்,  மாவட்ட பொருளாளர் நா.சீத்தராமன் வரவு, செலவு அறிக்கையினையும் தாக்கல் செய்தனர்.

இப்பேரவை கூட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கதத்தின் மாவட்ட தலைவர் முத்துராஜ், மாநில செயலாளர் ச.இ.கண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசினார்கள். இதில், மாவட்ட நிர்வாகிகள் ம.கதிரேசன், பாண்டீஸ்வரன், மீ.பத்மினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement

இதில், ஊராட்சி செயலாளர்களுக்கு ஊதிய மாற்ற அரசானையினை மானிய கோரிக்கையில் அறிவிக்க வேண்டும். கணினி இயக்குநர்களை நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கவும், அனைத்து நிலைகளிலும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் மாநில தலைவர் மு.சுப்பிரமணியன் நிறைவுரை வழங்கினார். மாவட்ட இணைச் செயலாளர் மை.பாலகுரு நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.