முகப்பு
தற்போதைய செய்திகள்

அரசு அதிகாரிகள் தற்கொலை நிகழ்வுகளை தடுக்க விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: எஸ்.காந்திசெல்வன்

தமிழகத்தில் தொடரும் அரசு அதிகாரிகள் தற்கொலை நிகழ்வுகளை தடுக்க விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்

Updated On : 23 செப்டம்பர், 2015 at 5:20 PM
பகிர்:

தமிழகத்தில் தொடரும் அரசு அதிகாரிகள் தற்கொலை நிகழ்வுகளை தடுக்க விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று திமுக நாமக்கல் கிழக்கு மாவட்டச்செயலர் எஸ்.காந்திசெல்வன் பேசினார்.

 திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வலியுறுத்தி நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு  மாவட்ட திமுக சார்பில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

 இதில் முன்னாள் மத்திய இணை அமைச்சரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலருமான எஸ்.காந்திசெல்வன் பேசியது: நேர்மையானவர்களை உயர் அதிகாரிகள் தரக்குறைவாகவே நடத்துகின்றனர். அமைச்சரால் மிரட்டப்பட்ட வேளாண் உயரதிகாரி அண்மையில் தற்கொலை செய்துகொண்டார். இப்போது பெண் டி.எஸ்.பி ஒருவர் தற்கொலை நிகழ்வு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நேர்மையான அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையை தடுக்கவும், விஷ்ணுபிரியா தற்கொலையில் உண்மை நிலை வெளியே தெரியவும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.  சிபிசிஐடி விசாரணையால் உண்மையான காரணம் வெளிவராது என்றார்.

Advertisement

 நாமக்கல் மேற்கு மாவட்ட செயலர் கே.எஸ்.மூர்த்தி, மாநில விவசாய அணி இணைசெயலாளர் பார்.இளங்கோவன் மற்றும் மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலர்கள் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.