தற்போதைய செய்திகள்

‘அப்பல்லோவில் அம்மா!’ என்ற தலைப்பில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் போலி புகைப்படங்கள்

DIN

‘அப்பல்லோவில் அம்மா!’ என்ற தலைப்பில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெறும்போது எடுக்கப்பட்டதாக சித்தரிக்கப்பட்ட சில புகைப்படங்கள் கடந்த இருநாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஒரு செவிலியின் கையைப் பிடித்தவாறு ஜெயலலிதா கட்டிலின்மீது அமர்ந்திருப்பது போன்ற ஒரு புகைப்படமும், தலையில் கட்டுடன் அவர் படுத்திருப்பது போன்ற மற்றொரு புகைப்படமும் பலரால் சகட்டு மேனிக்கு பரப்பப்பட்டு வருகிறது.

ஆனால், இது போட்டோ ஷாப் மூலம் போலியாக சித்தரிக்கப்பட்ட வேறொரு நோயாளியின் புகைப்படம் என்பதும் வெட்டவெளிச்சமாகியுள்ளது. அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணையப் பக்கமும் இந்த மோசடி புகைப்படத்தை தோலுரித்து காட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா்கள் நியமனம் ரத்து: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

மழை வேண்டி கோனியம்மன் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை

கோவை, திருப்பூரை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க கோரிக்கை

அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த கோரிக்கை

வேளாண் பல்கலை.யில் பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT