தற்போதைய செய்திகள்

முதல்வரின் உடல் நிலை குறித்து பிரதமர் நரேந்தர மோடியிடம் தொலைபேசியில் விளக்கினார்  வெங்கய்யா நாயுடு

DIN

முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, அவருக்கு இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் மூலம் ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவரை அவசர சிகிச்சை பிரிவில் வைத்து இசிஎம்ஓ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து தமிழகம் முழுவதும் அசாதரண சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில்  முதல்வரின் உடல்நலம் குறித்து கேட்டறிய மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு சென்னை வந்தார்.

அப்பல்லோ மருத்துவமனைக்கு இன்று மாலை வந்த அவர் மருத்துவர்களை சந்தித்து முதல்வரின் உடல் நலம் குறித்த்து கேட்டறிந்தார்.

பின்னர் பிரதமர் நரேந்தர மோடியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வரின் உடல் நிலை குறித்து விளக்கம் அளித்தார்.

சூழ்நிலையை தொடர்ந்து கண்காணிக்க வெங்கய்யா நாயுடு சென்னையில் தங்கியுள்ளதாகவும் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT