முதல்வர் ஜெயலலிதா மறைவு தாங்காமல் அதிமுக தொண்டர் பலி
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நிலை பாதிப்பால் மறைவின் அதிர்ச்சி தாங்காமல் கடலூர் காலனியை சேர்ந்த அதிமுக தொண்டர்
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:22 AM
மதுராந்தகம்
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நிலை பாதிப்பால் மறைவின் அதிர்ச்சி தாங்காமல் கடலூர் காலனியை சேர்ந்த அதிமுக தொண்டர் ஜெயராமன் செவ்வாய்கிழமை அதிகாலை மாரடைப்பில் காலமானார்.
செய்யூர் தொகுதி,லத்தூர் ஒன்றியம்,கடலூர் காலனியை சேர்ந்தவர் பாவாடைராயன். அவரது மகன் ஜெயராமன். (வயது 60).கூலி தொழிலாளி. இவர் அதிமுக கட்சியின் தீவிர தொண்டர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு செய்தியை தனியார் தொலைக்காட்சியை பார்த்து கொண்டிருந்த ஜெயராமன் அதிர்ச்சி அடைந்து மாரடைப்பினால் செவ்வாய்கிழமை அதிகாலை இறந்து போனார்.
இது குறித்து கூவத்தூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.