தற்போதைய செய்திகள்

கடும் பனிமூட்டம்: தில்லியில் ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிப்பு

தினமணி

தில்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக  ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தில்லியில் கடந்த சில நாட்களாகவே கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் ரயில் மற்றும் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் பகல் நேரங்களில் கூட சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டுச் செல்கின்றனர். கடும் பனிமூட்டம் நிலவியதால் இந்திரா காந்தி விமான நிலையத்தில் 6 சர்வதேச விமானங்கள் மற்றும் 7 உள்நாட்டு விமானங்களும் தாமதமாக வரவுள்ளது. மேலும் 1 உள்நாட்டு விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் 16 ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றப்பட்டதாகவும், 2 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் வடக்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. மேலும் 94 ரயில்கள் காலதாமதமாக இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT