தற்போதைய செய்திகள்

மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தின் பெயரை மாற்ற அமைச்சரவையில் முடிவு

DIN

சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் மற்றும் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தின் பெயரை மாற்ற மகாராஷ்டிரா அமைச்சரவை முடிவு செய்துள்ளது. 

சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் மற்றும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் என்று அழைக்கப்படுவதற்கு பதிலாக   மராத்திய போர்வீரன் சத்ரபதி சிவாஜி மகாராஜ் என்று அழைக்க மாநில அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

முன்னதாக இங்குள்ள ரயில் நிலையம் விக்டோரியா டெர்மினஸ் என்றும் விமானநிலையம் சஹார் சர்வதேச விமான நிலையம் என்றுமே அழைக்கப்பட்டது.  

1995ம் ஆண்டு பாரதீய ஜனதா -  சிவசேனா கூட்டணி கட்சி ஆட்சிக்கு வந்த போது சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் மற்றும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் என்று மாற்றப்பட்டது.

அதேபோல் இந்த ஆண்டு தொடக்கத்தில் பாஜக தலைமையிலான ஹரியாணா மாநில அரசு, மகாபாரத இதிகாசத்தின் அடிப்படையில் குர்கான் நகரின் பெயரை "குருகிராமம்' என்று மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

SCROLL FOR NEXT