முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜம்முவில் 17 நாட்களுக்கு பிறகு மொபைல் இணையதள சேவை இயக்கம்

ஜம்மு-காஷ்மீரில் 17 நாட்களுக்குப் பிறகு தொலைபேசி, மொபைல் இணையதளச் சேவை இன்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

Updated On : 26 ஜூலை, 2016 at 12:18 PM
பகிர்:

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் 17 நாட்களுக்குப் பிறகு தொலைபேசி, மொபைல் இணையதளச் சேவை இன்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி பர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்டதை அங்கு வன்முறை வெடித்து வந்தது. இந்நிலையில், தொலைபேசி, மொபைல் இணையதளச் சேவை தாற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

படிபடியாக ஸ்ரீநகரில் இயல்புநிலை திரும்பி வருகின்றது. இந்நிலையில், கடந்த 10-ம் தேதி நிறுத்தப்பட்ட தொலைபேசி, இணையதளச் சேவைகள் அந்நாட்டு அரசு உத்தரவின் படி நேற்றிரவு விதியைத் தளர்த்தி இன்று முதல் மீண்டும் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவித்துள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.