முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜூன் 21-ல் அண்ணாமலைப் பல்கலையில் மெகா யோகா பயிற்சி

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜூன் 21-ம் தேதி அண்ணாமலைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் மெகா யோகா பயிற்சி நடைபெறுகிறது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:31 PM
பகிர்:

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜூன் 21-ம் தேதி அண்ணாமலைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் மெகா யோகா பயிற்சி நடைபெறுகிறது.

நிகழ்ச்சியை துணைவேந்தர் செ.மணியன் தொடங்கி வைக்கிறார். கல்விப்புல முதல்வர் ஆர்.பாபு தலைமை வகிக்கிறார். பயிற்சியில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்களும் பங்கேற்கலாம். காலை 10.30 மணிக்கு யோகா கல்வி மையத்தில் மனிதகுல மேம்பாட்டிற்கு யோகம் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெறுகிறது.

விழாவின் ஒரு பகுதியாக பல்கலைக்கழக ராஜா முத்தையா அரங்கில் யோகா கண்காட்சி ஜூன் 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது.

கண்காட்சியை பதிவாளர் கே.ஆறுமுகம் தொடங்கி வைக்கிறார். கண்காட்சியில் பல்வேறு அமைப்புகளின் யோகா குறித்த நூல்கள், குறுந்தகடுகள் மற்றும் தயாரிப்புகள், மூலிகை வகைகள், சிறுதானியங்கள், சிறுதானிய உணவுகள் இடம்பெறுகின்றன. கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 5 மணி நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.