புதுச்சேரி பாஞ்சாலி அம்மன் கோவில் தேர் கவிழ்ந்து ஒருவர் பலி: 10 பேர் படுகாயம்
புதுச்சேரி திலாஷ்பேட்டையில் உள்ள பாஞ்சாலி அம்மன் கோவிலில் இன்று தீ மிதி திருவிழா நடந்தது. இதையொட்டி நடந்த தேரோட்டமும் நடைபெற்றது.
புதுச்சேரி திலாஷ்பேட்டையில் உள்ள பாஞ்சாலி அம்மன் கோவிலில் இன்று தீ மிதி திருவிழா நடந்தது. இதையொட்டி நடந்த தேரோட்டமும் நடைபெற்றது.
முன்னாள் முதல்வர் ரங்கசாமி வீட்டுக்கு பின்புறம் உள்ள தெருவில் தேர் வந்து கொண்டிருந்த போது திறந்து கிடந்த பாதாள சாக்கடை பள்ளத்தில் தேர் சக்கரம் சிக்கி கவிழ்ந்தது.
இதில் சரவணன் (45) என்பவர் பலியானார். 10 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் தேரை மீட்டனர். இந்த தேர் 25 அடி உயரம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.