தற்போதைய செய்திகள்

இளைஞர் எழுச்சி தின விழா

DIN

முன்னாள் குடியரசுத்தலைவர், அறிவியல் விஞ்ஞானி Dr. A.P.J அப்துல்கலாம் அவர்களின் 85 ஆவது பிறந்தநாள் விழா இளைஞர் எழுச்சி தின விழாவாக ஆசான் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை மற்றும் நாட்டுநலப் பணித்திட்ட த்தின் சார்பாகவும் சனிக்கிழமை (15.10.16) அன்று காலை சிறப்பாக நடைபெற்றது.

முதல் நிகழ்வாக அப்துல்கலாம் உருவப்படத்திற்கு மாலை அணிவித்துச் சிறப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் 50 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினர், கல்லூரி முதல்வர் பேரா.முனைவர் சு. இராமநாதன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் புல முதன்மையர் (Deen) பேரா. முனைவர் ஆ. ரவி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

ஆசான் மேலாண்மை நிறுவன இயக்குநர் பேரா.முனைவர் தி.சி.சாந்தி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கவிதை மற்றும் பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசான் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவரும் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளாருமான பேரா.முனைவர் பொன் இரமேஷ்குமார் அவர்கள் எழுச்சியுரை ஆற்றினார். நாட்டுப்பண்ணுடன்  விழா இனிதே நிறைவுபெற்றது.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT