தற்போதைய செய்திகள்

தீபாவளி பட்டாசுக் கடை: சென்னையில் 870 பேருக்கு அனுமதி

DIN

சென்னை, 

தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் பட்டாசு கடை வைப்பதற்கு 870 பேருக்கு அனுமதி அளித்து தீயணைப்புத்துறை தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது. இது குறித்த விவரம்:

தீபாவளி பண்டிகை அக்டோபர் 29-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தீபாவளி வியாபாரம் விறுவிறுப்பு அடையத் தொடங்கியுள்ளது. தீபாவளிக்காக தாற்காலிக பட்டாசு கடைகளும் ஆங்காங்கு தாற்காலிகமாக திறக்கப்பட்டு வருகின்றன. பட்டாசு கடைகளில் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் வகையில், தாற்காலிக பட்டாசு கடைகள் வைப்பதற்குரிய விதிமுறைகளை தீயணைப்புத்துறை செயல்படுத்தி வருகிறது.

தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்றால்தான் அந்தந்த மாநகர காவல்துறை அல்லது வருவாய்த்துறையிடமிருந்து உரிமம் பெற முடியும். பட்டாசு கடைகளை ஒழுங்குபடுத்துவற்காக தீயணைப்புத்துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து மாநிலம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

அதில் பட்டாசு கடைகள் வைப்பதற்கு பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை நேரடியாக ஆய்வு செய்த பின்னர் தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

தாற்காலிக பட்டாசு கடை விற்பனை உரிமம் கேட்பவர்கள் தீயணைப்புத் துறை, உள்ளாட்சி நிர்வாகம், காவல்துறை ஆகியோரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

சென்னையில் கடந்தாண்டு தாற்காலிக பட்டாசு கடைகள் திறப்பதற்கு 1,345 விண்ணப்பங்கள் தீயணைப்புத்துறைக்கு வந்தன. இந்த விண்ணப்பங்களில் 1,312  பேர் தடையில்லா சான்றிதழ் மூலம் உரிமம் பெற்று, பட்டாசு கடைகளை திறந்தனர். இதில் 33 விண்ணப்பங்கள், தகுதியில்லாமல் இருந்ததால் நிராகரிக்கப்பட்டன.

இந்தாண்டு இதுவரை தீயணைப்புத்துறைக்கு தாற்காலிக பட்டாசுக் கடை வைப்பதற்கு 1,006 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில் 870 பேருக்கு உரிமம் பெறுவதற்குரிய தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 130 விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. 6 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

"பட்டாசு கடை வைப்பதற்குரிய விதிமுறைகள் இந்தாண்டு கடுமையாக்கப்பட்டுள்ளன. இதனால் தகுதியான விண்ணப்பங்கள் மட்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கிறோம். தகுதியில்லாத விண்ணப்பங்களை நிராகரித்து வருகிறோம். இதனால் விண்ணப்பங்கள் குறைவாக வந்துள்ளன. இப்போது 130 விண்ணப்பங்கள் மட்டும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. அந்த விண்ணப்பங்களில் தகுதியானவற்றுக்கு ஓரிரு நாள்களில் தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும்' என்றார் தமிழக தீயணைப்புத்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT