தற்போதைய செய்திகள்

தீபாவளி முதல் ரோமிங் அழைப்புகளுக்கான இன்கமிங் கட்டணம் வசூலிக்கப்படாது: வோடபோன் அறிவிப்பு

DIN

மும்பை

தீபாவளி முதல் ரோமிங் அழைப்புகளுக்கான இன்கமிங் கட்டணம் வசூலிக்கப்படாது என வோடபோன் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சூறாவளியை சமாளிக்க நாள்தோறும் புதிய அறிவிப்புகளை ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. அந்த வரிசையில் தற்போது வோடபோன் நிறுவனமும் இணைந்துள்ளது. 

வோடபோன் நிறுவனத்தின் வர்த்தக பிரிவு இயக்குனர் சந்தீப் கட்டாரியா கூறுகையில் "தீபாவளி முதல் ரோமிங் அழைப்புகளுக்கான இன்கமிங் கட்டணம் வோடபோன் நிறுவனத்தில் வசூலிக்கப்படாது. இதனால் வாடிக்கையாளர்கள் இந்தியாவின் எந்த பகுதிக்கு சென்றாலும் அழைப்பு நின்றுவிடுமோ என்று பயம் கொள்ளத் தேவையில்லை" என்றார்.

ஏற்கனவே பி.எஸ்.என்.எல். நிறுவனம் கடந்த ஜூன் 15-ம் தேதி ரோமிங்கில் இன்கமிங் அழைப்புகள் இலவசம் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் - கான்பூரில் 6 பேர் கைது

அரண்மனை - 4 வசூல் இவ்வளவா?

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க போகுது: தமிழ்நாடு வெதர்மேன்!

ஹைதராபாத்தில் கனமழை: சுவர் இடிந்து 7 பேர் பலி!

SCROLL FOR NEXT