தற்போதைய செய்திகள்

புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 44 குடும்பங்களுக்கு வீட்டுமனை ஒப்படைப்பு

DIN

புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 44 குடும்பங்களுக்கு வீட்டுமனை ஒப்படைப்பு படிவ ஆணைகளை முதல்வர் வி.நாராயணசாமி சனிக்கிழமை வழங்கினார்.

நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட வெண்ணிலா நகரில் கடந்த 1983-ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 29 பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட மனைப்பட்டாக்களில் தற்போது வசித்து வரும் 44 குடும்பங்களுக்கு தனித்தனி பட்டாவாக துணைப்பிரிவு ஏற்படுத்தி வீட்டுமனை ஒப்படைப்பு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு ஆணைகளை முதல்வர் நாராயணசாமி வழங்கினார்.

நலத்துறை அமைச்சர் மு.கந்தசாமி, பிபிஏ தலைவர் த.ஜெயமூர்த்தி, தில்லி பிரதிநிதி ஜான்குமார், துறை செயலாளர் மிகிர்வரதன், இயக்குநர் டி.ரகுநாதன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

SCROLL FOR NEXT