தற்போதைய செய்திகள்

ஒபாமாவின் மகள் மாலியாவிற்கு காதல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மகள் மாலியாவிற்கு காதல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

DIN

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மகள் மாலியாவிற்கு காதல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகள் மாலியா (வயது 18). அவர் தற்போது நியூயார்க் மன் காட்டனில் உள்ள வின்ஸ்டர் இன் என்ற நிறுவனத்தில் பயிற்சி கல்வி பயின்று வருகிறார்.

வகுப்புக்கு செல்லும் போது, பின்தொடர்ந்து சென்ற ஜெயர் நில்டன் கார்டோசோ என்ற இளைஞர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கெஞ்சி தொல்லை கொடுத்திருக்கிறார்.

முதல் முறை தன் பின்னால் வந்தவரை பொருட்படுத்தாத மாலியா, இரண்டு நாளுக்குப் பின் மறுபடியும் மாலியாவை தன் பின்னால் வந்த போது மாலியாவின் பாதுகாவலர்கள் அந்த இளைஞரை கைது செய்துவிட்டனர்.

கார்டோசோவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஒபாமா அதிபராக இருந்த போதே வெள்ளை மாளிகைக்குள் நுழைந்து மாலியாவை பார்க்க முயற்சித்திருப்பதும் தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காதி - (தெலுங்கு) டிரெய்லர்!

வேணும் மச்சா பாடல்!

கட்டான கட்டழகி... பிரக்ரிதி பவனி!

அஜித் குமாருடன் கைகோக்கும் நரேன் கார்த்திகேயன்!

அழகும் அறிவும்... ஷான்வி ஸ்ரீவஸ்தவா!

SCROLL FOR NEXT