தற்போதைய செய்திகள்

நீட் தேர்வு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

DIN

சென்னை:  நீட் தேர்வு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

ஏற்கனவே நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

ஆனால் மத்திய அரசு நீட் தேர்வு கட்டாயம் என அறிவித்துள்ள நிலையில் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடித்தத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கையில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும்.

தற்போதைய நிலையே தொடர வேண்டும். நீட் தேர்வு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் முதுநிலை படிப்புகளில் மாநில அரசின் 50% இடஒதுக்கீடு தொடரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மே 7 தேதி நீட் தேர்வு நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புஷ்பா - 2 இரண்டாவது பாடல்!

ஹரியாணாவின் 10 தொகுதிகள்: காற்று வீசுவது யார் பக்கம்?

ஜெயக்குமார் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

வாரணாசியில் பிரியங்கா காந்தி ‘ரோடுஷோ’!

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்!

SCROLL FOR NEXT