தற்போதைய செய்திகள்

கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி சடலமாக மீட்பு

DIN

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சாஞ்சரவாடி கிராமத்தில் 400அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றின் அருகே 6 வயது சிறுமி காவேரி கடந்த 22ம் தேதி தனது சகோதரியுடன் விளையாடும் போது திடீரென ஆழ்துளை கிணற்றின் உள்ளே விழுந்தார். தகவல் அறிந்து வந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

2வது நாளான நேற்று, ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்கும் பணிகள் தொடர்ந்தது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் ராணுவ வீரர்களும் சம்பவ இடத்துக்கு வந்தனர். நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சிறுமியை உயிருடன் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தவறி விழுந்த சிறுமியை உயிருடன் மீட்க இன்று 3வது நாளாக மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில் 56 மணி நேரத்திற்குப் பின் சிறுமி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்வு

ரூ.ஒரு லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

தேவாலயத்தில் சிறாா்களுக்கு சிறப்புப் பயிற்சி

தாகம் இல்லாவிட்டாலும் போதிய இடைவேளைகளில் குடிநீா் பருக வேண்டும்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தினம் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT