தற்போதைய செய்திகள்

2018-ம் ஆண்டின் நிறமாக பர்பிள் நிறம் தேர்வு: அமெரிக்காவின் பேண்டோன் அமைப்பு அறிவிப்பு

DIN

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் இயங்கி வரும்  'பேண்டோன்' என்ற நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் அதிகாரப்பூர்வமான நிறம் அறிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.

2010ல் இருந்து இந்த நடைமுறை வழக்கத்தில் இருக்கிறது.  இந்த நிலையில் 2018-ம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ நிறத்தை அந்த நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. அதன்படி அந்த நிறுவனம் பர்பிள் நிறத்தை இந்த ஆண்டின் நிறமாக தேர்வு செய்து இருக்கிறது. இந்த நிறம் செல்வ வளத்தை குறிக்கும் என்பதாலும், வருகிற ஆண்டு அதிக செல்வ செழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த நிறம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிறத்தை தேர்ந்தெடுப்பதற்காக உலகில் இருக்கும் முக்கியமான நாடுகள் அனைத்தில் இருந்தும் சில நபர்கள் அழைக்கப்படுவார்கள். அவர்களின் சந்திப்பு யாருக்கும் தெரியாத இடத்தில் ரகசியமாக நடைபெறும். மேலும் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்பதும் ரகசியமாக வைக்கப்படும். பின் டிசம்பர் மாதத்தில் சரியாக நிறத்தை தேர்வு செய்துவிட்டு அறிவிப்பை வெளியிடுவார்கள். அந்த வகையில் தற்போது  2018ம் ஆண்டின் நிறமாக பர்பிள் நிறத்தை தேர்வு செய்து அதிகாரப்பூர்வ அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

2017-ம் ஆண்டின் அதிகாரப்பூர்வ நிறமாக பச்சை நிறம் தேர்வு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 யூனிட் விலையில்லா மின்சாரம் இனி கிடையாதா? எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

கதைக்கு மட்டுமே முக்கியத்துவம்: ஹிப்ஹாப் ஆதி

ராஜ்கோட் தீ விபத்து எதிரொலி: வதோதராவில் பொழுதுபோக்கு விளையாட்டு மையங்கள் மூடல்

சர்தார் - 2 படப்பிடிப்பு எப்போது?

எப்போது திருமணம்? மாளவிகா பதில்!

SCROLL FOR NEXT