தற்போதைய செய்திகள்

ஈரானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

DIN

லெபனான்: ஈரானின் வடக்கு மற்றும் தெற்கு மத்திய பகுதியில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. இதனால் அச்சமடைந்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு வீட்டை வீட்டு வெளியேறி தெருக்களில் வந்து தஞ்சமடைந்தனர்.

ஈரானின் தென்கிழக்கு மாகாணமான கெர்மானில் இருந்து 64 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தை மையமாகக் கொண்டு இன்று அதிகாலை 3.11 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. அதன் பிறகு 5.0, 4.5 என இரண்டு முறை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

முன்னதாக நேற்று காலையும் கெர்மான் மாகாணத்தில் உள்ள ஹெஜ்தாக் மற்றும் ராவார் கிராமங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியிருந்ததாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு பல முறை நில அதிர்வு ஏற்பட்டது.

திங்கள் மற்றும் நேற்று செவ்வாய்கிழமை நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 20 வீடுகள் சேதமடைந்தாதகவும், 18 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியானது. தொடர்ந்து மூன்று நாட்களாக நிலநடுக்கம் ஏற்பட்டுக் கொண்டிருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

SCROLL FOR NEXT