தற்போதைய செய்திகள்

அரசியல் கிசு கிசு: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ய மறுப்பு? ஆதரவு எம்எல்ஏக்களுடன் ரகசியமாக ஆலோசனை

சென்னை:  அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில்

DIN

சென்னை:  அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.  

இந்த கூட்டத்தில் சசிகலா, சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. அப்படி அவர் சட்டமன்ற கட்சி தலைவராக வேண்டும்  என்றால், முன்னதாக தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ய வேண்டும்.

அந்த ராஜினாமா கடிதத்தை தமிழக ஆளுநனரிடம் ஓ.பன்னீர்செல்வம் வழங்க வேண்டும். ஆனால், இன்று காலை வரை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்வதாக யாரிடமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

அவர் ராஜினாமா செய்ய மறுத்து வருவதாகவும்,  தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ரகசியமாக ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜன. 6 -ல் அமைச்சரவைக் கூட்டம்!

சுரங்கத்தில் ரயில்கள் மோதி விபத்து: 65 பேர் படுகாயம்

தங்கம் விலையில் மாற்றம்: எவ்வளவு குறைந்தது?

திராவிடப் பொங்கல் விழாவுடன் மலரட்டும் புத்தாண்டு 2026! தொண்டர்களுக்கு முதல்வா் ஸ்டாலின் வாழ்த்து!!

ஜப்பானை பின்னுக்குத்தள்ளியது இந்தியா! உலகின் 4வது பெரிய பொருளாதார நாடு!

SCROLL FOR NEXT