தற்போதைய செய்திகள்

சாலைகளில் பறக்கும்  இரண்டு மாடல் கார்களை அறிமுகம் செய்துள்ளது பால் - நிறுவனம்

DIN

பால் -வி  நிறுவனம் லிபர்ட்டி ஸ்போர்ட் மற்றும் லிபர்ட்டி பாய்னியர் என இரண்டு மாடல்களில் பறக்கும் கார்களை அறிமுகம் செய்துள்ளது.

மூன்று சக்கரங்களுடன் இரு இருக்கைகளை கொண்டுள்ள இந்த மாடல் கார்களின் அதிகபட்ச வேகம் மணிக்கு 179 கிமீ ஆகும். இந்த கார்கள் பறக்கும் நிலையிலிருந்து சாலை நிலைக்கு மாற 5 முதல் 10 நிமிடங்கள் வரை எடுத்துக்கொள்ளும். இரு எஞ்சின்களை பெற்றுள்ள இந்த கார்களில் பறக்கும் நிலையில் ரோடார் எஞ்சினும் , சாலை நிலைக்கு ஏற்ற எஞ்சினும் கொடுக்கப்பட்டுள்ளது.

எந்த இடத்திலிருந்தும் பறக்கும் தன்மை கொண்ட இந்த பால் வி வாகனங்களில் சாதரன சாலை போக்குவரத்து சமயத்தில் 100.3 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எஞ்சின் செயல்பாட்டில் இருக்கும். இதன் அதிபட்ச வேகம் மணிக்கு 160 கிமீ மற்றும் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்ட 9.0 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். லிட்டருக்கு 10.97 கிமீ மைலேஜ் தரும்..முழுமையாக எரிபொருள் நிரப்பியிருந்தால் சாலையில் 1314 கிமீ வரை பயணிக்கலாம்.

பறக்கும் உயரம் அதிகபட்சமாக 3500 மீட்டர் வரை மேலே செல்ல இயலும். இதில் 200 ஹெச்பி எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக மணிக்கு 169 கிமீ வேகத்தில் பறக்கும் தன்மை கொண்ட இந்த கார்கள் 498 கிமீ வரை இயக்கலாம். அதெல்லாம் சரி இதன் விலை என்ன என்றுதானே கேட்கிறீர்கள்..  

லிபர்ட்டி ஸ்போர்ட் மாடல் காரின் விலை 3,99,000 டாலர் அதாவது 2.52 கோடி இந்திய ரூபாய். லிபர்ட்டி பாய்னியர் மாடல் காரின் விலை 5,99,000 டாலர் இதன் இந்திய ரூபாய் மதிப்பு 3.78 கோடி ஆகும். என்ன இனி நாமும் சாலைகளில் பறக்கலாம் தானே..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

SCROLL FOR NEXT