தற்போதைய செய்திகள்

முட்டை விட முடியாத பெட்டைக் கோழியாய் எதை அடைகாக்கப்போகிறான்.. நாளைய தமிழன்!

திருமலை சோமு

தொலைந்து போன பொங்கல் வாழ்த்து அட்டைகளை தேடி சேகரித்து வைத்துக்கொள்ளுங்கள்.. நாளைய நம் தலைமுறையினருக்கு.. ஏர்கலப்பை பொங்கல் பானை, செங்கரும்பு.. ஜல்லிக்கட்டு என எல்லாவற்றையும் அந்த அட்டைகளில் மட்டுமே காட்ட வேண்டிவரலாம்..

இப்படி நாம் தொலைத்தவை எத்தனை எத்தனையோ.. எல்லா தொலைத்தலுக்குப் பின்னாலும் மெல்லியதாய் ஒரு அரசியல் ஒளிந்திருப்பதை உணர்கிறேன்.. ஒரு இனத்தை அழிக்க முதலில் அவன் மொழியை.. பண்பாட்டை, கலாச்சாரத்தை அழித்தால் போதும் என்று எங்கோ எப்போது யாரோ சொன்னது என் காதில் ஒலிக்கிறது..

உண்மையில் நாம் அழிந்து கொண்டுதான் இருக்கிறோமோ.. என்ற கேள்வியை நாம் ஒவ்வொரும் நமக்கு நாமே கேட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.

எதற்கும் எப்போதும்.. தன்னை சமரசம் செய்து கொள்ளாமல் ஒரு கொள்கை பிடிவாதத்தோடு இருக்கின்ற ஒருவனிடம்... எந்த சதியும் சூழ்ச்சியும் நெருங்க முடியாது.. ஆனால் நாம் நரி இடம் போனால் என்ன வலம் போனால் என்ன.. சோறுகட்ட இடமே சொர்க்கம் என்பது போல.. பணம் என்ற ஒரு தேடலுக்குள்ளேயே தொலைந்து போகிறோம்..

பணத்தால் ஒரு போதும் மீட்டெடுக்க முடியாத பொக்கிஷம் தான் நம் பாரம்பரிம்.. பாட்டி வைத்தியத்தில் இருந்து பாட்டன் சொன்ன ஜல்லிக்கட்டு வரைக்கும் எல்லாஅடையாளத்தையும் இழந்து விட்டு முட்டை விட முடியாத பெட்டைக் கோழியாய் எதை அடைகாக்கப்போகிறான்.. நாளைய தமிழன்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோல்வி பயத்தில் நடுங்குகின்றனர் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

கடல் புறா!

எலி பேஸ்ட் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

மே 25 - ஆறாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 58 தொகுதிகள் யார் பக்கம்?

கேன்ஸ் திரைப்பட விழா: உயரிய விருதைப் பெற்றார் சந்தோஷ் சிவன்!

SCROLL FOR NEXT