தற்போதைய செய்திகள்

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: மு.க.ஸ்டாலின் வாழ்த்து

DIN

அதிமுகவின் நிறுவனத் தலைவரும் முன்னாள் முதல்வருமான மறைந்த எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவுக்கு திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:  திரைவாழ்விலும் பொதுவாழ்விலும் கருணாநிதியுடன் இணைந்து பயணித்தவர் எம்ஜிஆர். அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்த போதும் எம்ஜிஆருக்கும் கருணாநிதிக்குமான நட்பு ஆழமானது.

தன்னுடன் இருந்தவர்கள் கருணாநிதியின் பெயரைக் குறிப்பிட்ட போதெல்லாம் அவர்களைக் கண்டித்துத் திருத்தியவர் எம்ஜிஆர். தனிப்பட்ட முறையில் என்னிடமும் அன்பும் பாசமும் காட்டி ஊக்கம் ஊட்டியவர். திமுகவின் கொள்கைப் பிரசார நாடகத்தில் நான் நடித்த போது, அதற்குத் தலைமை வகித்து வாழ்த்துரை வழங்கி என்னை உற்சாகப் படுத்தியதை என்னால் மறக்க முடியாது. 

 எம்ஜிஆரின் நினைவிடத்தைச் சீரும் சிறப்புமாக அமைத்தும், தமிழ்நாடு மருத்துவ பல்கலைக்கழகத்துக்கும், தரமணியில் உள்ள திரைப்பட நகருக்கும் எம்ஜிஆரின் பெயரை கருணாநிதி சூட்டியதையும் இந்த நேரத்தில் நினைத்து பார்க்கிறேன். 

 எம்ஜிஆரின் நூற்றாண்டு நிறைவு பெறும் இந்த நேரத்தில் அவரது நினைவைப் போற்றி, எவ்வித பலனும் எதிர்பாராமலும் அனுபவிக்காமலும் அவர் மீது உண்மையான அன்பு கொண்டிருப்போருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் என்று அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT