தினமணி நாளிதழ் கோவையில் நடத்திய, நடிகர் சிவகுமாரின் ஓவியக் கண்காட்சி நிகழ்வுகளின் தொகுப்பை சூப்பர் தொலைக்காட்சி வெள்ளிக்கிழமை, சனிக்கிழமைகளில் ஒளிபரப்புகிறது.
நடிகரும், ஓவியருமான சிவகுமார் வரைந்த ஓவியங்களின் கண்காட்சியை சித்திரச்சோலை என்ற பெயரில் தினமணி நாளிதழ் கோவையில் ஜனவரி 14 முதல் ஜனவரி 16 வரை நடத்தியது.
இந்தக் கண்காட்சியை கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கானோர் கண்டுரசித்தனர். கண்காட்சியின் இறுதி நாளில் சிவகுமாரின் ஓவியங்கள் ஏலத்தில் விடப்பட்டு, ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக நடிகர் சூர்யா நடத்தி வரும் அகரம் அறக்கட்டளைக்கு அந்தத் தொகை வழங்கப்பட்டது.
இந்த நிலையில், தொடக்க விழா முதல் நிறைவு விழா வரையிலான நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்துள்ள சூப்பர் தொலைக்காட்சி, அந்த நிகழ்ச்சித் தொகுப்பை இன்றும், நாளையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஒளிபரப்ப உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.