முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:21 PM
பகிர்:

சென்னை:  தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீரென காய்ச்சல் மற்றும் வயிற்று வலி காரணமாக சபாநாயகர் தனபால் இன்று காலை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவருக்கு தற்போது மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மருத்துவமனைக்கு சென்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

தற்போது சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான கூட்டத்தொடரில் சபாநாயகர் கலந்து கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. சட்டமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் சபாநாயகர் தனபால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதால், மீதமுள்ள நாட்களில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அவையை வழி நடத்திச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →