தற்போதைய செய்திகள்

ஜிஎஸ்டி வரிவிதிப்பால் ஏழை மக்களும் நடுத்தர மக்களும் பாதிக்கப்பட மாட்டார்கள்: வெங்கய்யா நாயுடு

DIN

சென்னை: ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்த விளக்கக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

அதில் மத்திய அமைச்சர்கள் வெங்கய்யா நாயுடு, நிர்மலா சீத்தாரமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு,  ஜிஎஸ்டி வரிவிதிப்பால் ஏழை மக்களும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். மாறாக பயன் அடைவார்கள். ஆனால் யாரெல்லாம் ஒழுங்காக வரி கட்டும் பழக்கம் இல்லாதவர்களோ அவர்கள் தான் பாதிக்கப்படுவார்கள் என கூறினார்.

அதேவேளையில் நாட்டின் மொத்த உள்நாடு உற்பத்தி எனப்படும் ஜிடிபி அதிகரிக்கும் எனவும் கூறினார். ஆனால் கடந்த நவம்பர் 8ஆம் தேதி மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு அறிவிப்புக்குப் பிறகு நாட்டின் ஜிடிபி 6.1 ஆகக் குறைந்துள்ளது.

ஜிஎஸ்டி வரிவிதிப்பால், அது இன்னும் குறையும் அபாயம் உள்ளது என பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

SCROLL FOR NEXT