தற்போதைய செய்திகள்

நிதீஷ் குமார் மிகப்பெரிய சந்தர்ப்பவாதி: லாலு பிரசாத் யாதவ்

மகா கூட்டணியில் இருந்து விலகி பா.ஜனதாவுடன் ஐக்கிய ஜனதா தளம் இணைந்து நிதீஷ் ஆட்சி அமைத்து உள்ளதை லாலு கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். 

DIN

பாட்னா:  மகா கூட்டணியில் இருந்து விலகி பா.ஜனதாவுடன் ஐக்கிய ஜனதா தளம் இணைந்து நிதீஷ் ஆட்சி அமைத்து உள்ளதை லாலு கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். 

பிகாரில் அதிக எம்.எல்.ஏ.க்களை கொண்ட கட்சி ராஷ்டீரிய ஜனதா தளம். முறைப்படி ஆளுநர் எங்களை ஆட்சி அமைக்க அழைத்திருக்க வேண்டும் என்று கூறிய லாலு பிரசாத் யாதவ் தில்லியில் மூத்த வழக்கறிஞர்களுடன் தொடர்பில் உள்ளேன்.  ஊழல் குற்றச்சாட்டுக்கள் வழியாக லாலு பிரசாத்திற்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என நிதீஷ் குமார் பாரதீய ஜனதாவுடன் கைகோர்த்து உள்ளார்.

நிதீஷ் எங்களை கலந்தாலோசிக்கவில்லை. இது பா.ஜ.க.வின் சதித் திட்டமாகும் என்று கூறியுள்ளார். மேலும் பா.ஜ.க எங்களுக்கு எதிராக சிபிஐ-யை பயன்படுத்துகிறது என்றும் கூறினார். மேலும் நிதிஷ் குமார் மிகப்பெரிய சந்தர்ப்பவாதி, பிகார் மாநில மக்கள் தேர்தலில் கொடுத்த வெற்றியானது பாரதீய ஜனதாவிற்கு எதிரானது,

மோடி மற்றும் அமித்ஷாவை வெளியேற்ற கிடைத்த வெற்றியாகும் என்று கூறிய அவர் தொடர்ந்து  ஊடகங்களை குற்றம் சாட்டிய லாலு அமித்ஷா மீடியா உரிமையாளர்களிடம் பேசுகிறார், அவர்கள் செய்தி ஆசிரியர்களிடம் பேசுகிறார், இது செய்தியாளர்கள் தவறு கிடையாது என்றார் லாலு பிரசாத் யாதவ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ம.பி.யில் குழந்தைகள் பலி: மேலும் 2 இருமல் மருந்துகளுக்குத் தடை!

2001 இதே நாளில்... அரசியல் பயணத்தை நினைவுகூர்ந்த மோடி!

மனிதநேயம், நீதி படுகொலை: தலித் இளைஞர் கொலைக்கு ராகுல் கண்டனம்!

உடல் பருமன் இருந்தால் மறதி ஏற்படுமா? - ஆய்வில் முக்கிய தகவல்

இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவு! பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு!

SCROLL FOR NEXT