தற்போதைய செய்திகள்

அமெரிக்காவில் இருந்து நெதர்லாந்து சென்றார் பிரதமர் நரேந்திர மோடி

DIN

பிரதமர் நரேந்திர மோடி வாஷிங்டனில் இருந்து தனிவிமானம் மூலம் நெதர்லாந்து புறப்பட்டு சென்றார்.

நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஸ்கிப்போல் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பெர்ட் கோயன்டர்ஸ் வரவேற்றார்.

ஆம்ஸ்டர்டாம் நகரில் வசிக்கும் ஏராளமான இந்தியர்களும், இந்திய வம்சாவளியினரும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களின் வரவேற்பை அன்புடன் ஏற்றுக்கொண்ட மோடி சிலருடன் இணைந்து ‘செல்பி’ எடுக்க ‘போஸ்’ கொடுத்தார். இதையடுத்து பிரதமர் மோடி நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே-வை சந்தித்துப் பேசினார். 

அந்நாட்டு அரசர் வில்லெம் அலெக்சாண்டர் மற்றும் அரசி மேக்சிமாவை சந்திக்கவுள்ள அவர் மன்னர் அளிக்கும் விருந்தில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், இன்று உலக நாடுகள் அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்தும், ஒன்றையொன்று சார்ந்தும் உள்ளன. பிரதமர் மார்க் ருட்டேவுடனான சந்திப்பின்போது சர்வதேச விவகாரங்களில் இருநாடுகளின் நிலைப்பாடு குறித்து ஆலோசிப்போம் என்று குறிப்பிட்டிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

SCROLL FOR NEXT